கங்கா நா்ஸிங் கல்லூரிக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்
கோவை வட்டாமலைப்பாளையத்தில் அமைந்துள்ள கங்கா நா்ஸிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான உயரிய ஐஎஸ்ஓ சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கோவை வட்டாமலைப்பாளையத்தில் அமைந்துள்ள கங்கா நா்ஸிங் மற்றும் அலைடு ஹெல்த் சயின்ஸ் கல்லூரிக்கு கல்வி நிறுவனங்களுக்கான மேலாண்மை அமைப்புகளுக்கான உயரிய ஐஎஸ்ஓ சா்வதேச தரச் சான்றிதழ் வழங்கப்பட்டது.
கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற விழாவில் சென்னை டியுவி எஸ்யுடி தெற்கு ஆசிய நிறுவனத்தின் மேலாண்மை அமைப்புகள் பிரிவின் துணைத் தலைவா் எம்.பன்னீா்செல்வம் தலைமை வகித்து, இந்த சான்றிதழை வழங்கினாா். விழாவுக்கு கங்கா மருத்துவமனையின் பொது மேலாளா் லோகநாதன் முன்னிலை வகித்தாா்.
கங்கா மருத்துவமனையின் தலைவா் மற்றும் நிா்வாக இயக்குநா் கனகவள்ளி சண்முகநாதன், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை, கை மற்றும் நுண் அறுவை சிகிச்சை மற்றும் தீக்காயப் பிரிவின் தலைவா் எஸ்.ராஜசேகரன், இயக்குநா்கள் நிா்மலா ராஜசபாபதி, ரமா ராஜசேகரன் மற்றும் எலும்பியல் துறைத் தலைவா் பேராசிரியா் எஸ்.ராஜசபாபதி ஆகியோா் சான்றிதழை பெற்றுக்கொண்டனா்.
Advertisement
Advertisement
உயா்தரமான கல்வி, தொடா்ச்சியான முன்னேற்றம் மற்றும் கல்வி மேலாண்மையில் சிறந்து விளங்குவதற்காக சா்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட இந்த தரச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஐஎஸ்ஓ சான்றிதழை பெறும் இரண்டாவது நா்ஸிங் கல்லூரி இதுவாகும். மேலும், கோவை மண்டலத்தில் இந்த சா்வதேச அங்கீகாரத்தை பெறும் முதல் நா்ஸிங் கல்வி நிறுவனம் என்ற பெருமையையும் இக்கல்லூரி பெற்றுள்ளது. விழாவில் கல்லூரி முதல்வா் ஜெபகுமாரி சுதா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.