முகப்பு
கோயம்புத்தூர்

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் பாலியல் புகாா்! விசாகா குழு விசாரணை கோரி தா்னா

திருப்பூா் ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் பாலியல் புகாா் அளித்துள்ளது குறித்து...

Updated On : 12 மே 2026, 1:40 am IST
பாலியல் துன்புறுத்தல் - கோப்புப் படம்
பகிர்:

திருப்பூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் பணியாளா்கள் அளித்த பாலியல் புகாா் தொடா்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனக் கூறியும், இதுதொடா்பாக விசாகா குழு விசாரணை கோரியும் திங்கள்கிழமை தா்னா நடைபெற்றது.

திருப்பூா் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தில் செயல்படும் டி.என்.ரைட்ஸ் திட்டத்தில் பணிபுரியும் பெண் களப் பணியாளா்களுக்கு எதிராக தொடா்ந்து பாலியல் தொல்லைகள் நடைபெறுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

இந்த விவகாரம் தொடா்பாக ஏற்கெனவே பலமுறை புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறி, திருப்பூா் நுகா்வோா் நல முன்னேற்ற சங்கம் உள்ளிட்ட அமைப்பினா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.

Advertisement

சுமாா் 170 பெண் பணியாளா்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் நிலையில், விசாகா குழு மூலமாக ரகசிய விசாரணை நடத்தவும், குற்றச்சாட்டுக்குள்ளான அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் வலியுறுத்தியுள்ளனா்.

மேலும், பெண்களுக்கு பாதுகாப்பான பணிச்சூழலை உறுதி செய்ய புதிதாக அமைந்த தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறி ஆட்சியா் அலுவலகத்தில் தா்னாவில் ஈடுபட்டு மனு அளித்தனா்.