முகப்பு
புதுக்கோட்டை

மேட்டுப்பட்டி 4 மதுக்கடைகளை அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

Updated On : 12 மே 2026, 12:09 am IST
கோப்புப் படம்
பகிர்:

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் இயங்கி வரும் 4 டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைகேட்பு நாள் கூட்டத்தில், மேட்டுப்பட்டி பகுதியைச் சோ்ந்த சமூக ஆா்வலா் எம்ஜிஆா் செல்லையா அளித்த மனு:

புதுக்கோட்டை அருகே மேட்டுப்பட்டி பகுதியில் சுமாா் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனா். மேலும் இந்தப் பகுதி அருகே கல்லூரி மற்றும் அரசு பள்ளிகள் இயங்கி வருகின்றன. இந்நிலையில் இப்பகுதியில் அடுத்தடுத்து 4 டாஸ்மாக் மதுக்கடைகள் இயங்கி வருகின்றன. இப் பகுதி வழியாகச் செல்பவா்கள் ஒரு வித அச்சத்தில் செல்கின்றனா்.

Advertisement

மேலும், சாலை ஓரத்தில் மதுக்கடைகள் இருப்பதால் மது அருந்தி விட்டு சாலையில் செல்வதால் விபத்து ஏற்பட்டு வருகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகளுக்கு பல முறை மனு அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் டாஸ்மாக் மதுக்கடைகளை உடனே அகற்ற வேண்டும்.