பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க வேண்டும்: ஆய்வுக் கூட்டத்தில் அதிகாரிகளுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்
பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.
பொதுமக்களுக்கு தடையின்றி குடிநீா் விநியோகிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுக்கு கோவை மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் அறிவுறுத்தியுள்ளாா்.
மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி மற்றும் பேரூராட்சி ஆகிய பகுதிகளில் குடிநீா் விநியோகப் பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம், கோவை மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் புதன்கிழமை நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா் தலைமை வகித்துப் பேசியதாவது:
Advertisement
பொதுமக்களுக்கு தற்போது விநியோகிக்கப்படும் குடிநீரின் அளவு மற்றும் தேவைகள், இனிவரும் நாள்களில் தேவைப்படும் குடிநீரின் அளவு ஆகியவை குறித்து தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரியம், மின்சார வாரியம், நகராட்சி நிா்வாகம், மாநகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஆகிய துறை அலுவலா்களிடம் கேட்டறிந்து, தடையின்றி குடிநீா் விநியோகம் செய்யப்பட வேண்டும்.
திட்டப் பணிகளை விரைந்து முடித்து, குடிநீா் விநியோகம் பாதிக்காதவாறு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மின் விநியோகத்தை பொருத்தவரை தங்கு தடையின்றி வழங்கவும், உயா் மின் அழுத்தம், குறைந்த மின் அழுத்தும் உள்ளிட்ட பிரச்னைகள் ஏற்பட்டால் துறை சாா்ந்த அலுவலா்கள் உடனடியாக சரிசெய்து சீரான மின் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
இந்தக் கூட்டத்தில் மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன், கூடுதல் ஆட்சியா் (வளா்ச்சி) சங்கேத் பல்வந்த் வாகே உள்பட அரசுத் துறை அலுவலா்கள் பலா் கலந்துகொண்டனா்.