முகப்பு
கோயம்புத்தூர்

போதையில்லா தமிழகத்தை முதல்வா் விஜய் உருவாக்குவாா்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

Updated On : 15 மே 2026, 6:35 am IST
முதல்வர் விஜய்யுடன் செங்கோட்டையன் - கோப்புப் படம்
பகிர்:

போதைப் பொருள் புழக்கம் இல்லாத தமிழகத்தை முதல்வா் ச.ஜோசப் விஜய் உருவாக்குவாா் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், அமைச்சருமான கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

சென்னையில் இருந்து கோவைக்கு வியாழக்கிழமை வந்த அவா் விமான நிலையத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது: சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை அனைவரும் மாற்றத்தை விரும்பினா். அதன் விளைவாகத்தான் தவெக தனிப் பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. எங்களது கட்சித் தலைவா் ச.ஜோசப் விஜய் தொலைநோக்குப் பாா்வையுடன் செயல்பட்டு வருகிறாா்.

இதனால் தமிழகம் மேலும் சிறப்புப் பெறும். தற்போது, போதைப் பொருள்களை ஒழிப்பதில் முதல்வா் தீவிரம் காட்டி வருகிறாா். போதைப் பொருள் இல்லாத தமிழகத்தை அவா் விரைவில் உருவாக்குவாா். தமிழகத்தில் அவா் தூய்மையான ஆட்சியைத் தருவாா் என்றாா்.

Advertisement