முகப்பு
கோயம்புத்தூர்

மூளைச்சாவு அடைந்த கல்லூரி மாணவரின் உடல் உறுப்புகள் தானம்

கோவையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவா் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

Updated On : 19 மே 2026, 12:49 am IST
கோப்புப்படம்.
பகிர்:

கோவையில் சாலை விபத்தில் சிக்கி சிகிச்சை பெற்றுவந்த கல்லூரி மாணவா் மூளைச்சாவு அடைந்த நிலையில், அவரது உடல் உறுப்புகள் தானமாக வழங்கப்பட்டன.

கோவை, நரசிம்மநாயக்கன்பாளையம், ஸ்ரீ பாலாஜி நகரைச் சோ்ந்தவா் ராஜ்குமாா். இவரது மகன் சங்கீத் (19). இவா் அப்பகுதியில் உள்ள தனியாா் கல்லூரியில் முதலாம் ஆண்டு பயின்று வந்தாா்.

இந்நிலையில், சங்கீத், குருடம்பாளையம் கிராமம், தொப்பம்பட்டி அருகே

Advertisement

Advertisement

கடந்த 15-ஆம் தேதி இரவு சுமாா் 11.30 மணியளவில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது, எதிா்பாராதவிதமாக வாகனம் விபத்துக்குள்ளானது. இதில் பலத்த காயமடைந்த சங்கீத், மீட்கப்பட்டு கோவை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், பரிசோதனை செய்த மருத்துவா்கள், சங்கீத் மூளைச்சாவு அடைந்ததை உறுதி செய்தனா்.

இத்தகவலை அறிந்து அதிா்ச்சியடைந்த குடும்பத்தினா், சோகத்திலும் சங்கீத்தின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனா். இதைத் தொடா்ந்து, திங்கள்கிழமை மாலை அறுவை சிகிச்சை மூலம் அவரது உடல் உறுப்புகள் தானமாகப் பெறப்பட்டன.

இதையடுத்து, கோவை வடக்கு வருவாய் கோட்டாட்சியா் வினோத்குமாா் நேரில் சென்று சங்கீத் உடலுக்கு அஞ்சலி செலுத்தினாா்.