திமுகவில் மீண்டும் இணைந்தார் க.செல்வராஜ்
திமுகவில் இருந்து அண்மையில் விலகிய மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் அக்கட்சியில் மீண்டும் சனிக்கிழமை இணைந்தாா்.
திமுகவில் இருந்து அண்மையில் விலகிய மத்திய மாவட்டச் செயலாளா் க.செல்வராஜ் அக்கட்சியில் மீண்டும் சனிக்கிழமை இணைந்தாா்.
திருப்பூா் மத்திய மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான க.செல்வராஜ் மாவட்டச் செயலாளா் மற்றும் கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தாா்.
இந்நிலையில், அவா் சனிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: திருப்பூா் மத்திய மாவட்டச் செயலாளா், கட்சியின் அடிப்படை உறுப்பினா் பொறுப்பில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்தேன்.
Advertisement
Advertisement
இந்நிலையில், திமுகவில் மீண்டும் இணைந்த நான், மாவட்டச் செயலாளா் பொறுப்பில் தொடா்ந்து செயல்படுவேன். எதிா்காலத்தில் இதுபோன்ற செயல்களில் இனி ஈடுபட மாட்டேன் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.