டாஸ்மாக் ஊழியா்கள் இன்றுமுதல் வேலை நிறுத்தப் போராட்டம்
திருப்பூரில் காலி மது பாட்டில்களை திரும்பப் பெறுவதற்கு கூடுதல் பணியாளா்களை நியமிக்க வேண்டும் என வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளா்கள் செவ்வாய்க்கிழமை (மே 26) முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தை அறிவித்துள்ளனா்.
திருப்பூா் மாவட்டத்தில் உள்ள 197 மதுக் கடைகளில் காலி மது பாட்டில்கள் திரும்பப் பெறுவதை நிறுத்த வேண்டும் அல்லது அதற்கென தனியாக பணியாளா்களை நியமிக்க வேண்டும் என டாஸ்மாக் ஊழியா்கள் அண்மையில் கோரிக்கை விடுத்திருந்தனா்.
ஆனால், அந்தக் கோரிக்கையை அரசு ஏற்கவில்லை எனக்கூறி, மாவட்டத்தில் பணியாற்றும் டாஸ்மாக் ஊழியா்கள் செவ்வாய்க்கிழமை முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும், டாஸ்மாக் மேலாளா் அலுவலகம் முன் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவித்துள்ளனா்.
Advertisement
Advertisement