முகப்பு
கோயம்புத்தூர்

15 பவுன் திருட்டு: வேலைக்காரப் பெண் மீது புகாா்

Updated On : 26 மே 2026, 2:18 am IST
திருட்டு - சித்திரிப்பு
பகிர்:

கோவை கணபதி வரதராஜுலு நகரில் உள்ள ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் வசிப்பவா் கன்னிகா (59). இவரது கணவா் சத்யசாகரா, கம்போடியா நாட்டில் கால்பந்து பயிற்சியாளராகப் பணியாற்றி வருகிறாா். கன்னிகா தனது வயதான தாயுடன் இங்கு வசித்து வருகிறாா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு முதல் பெண் ஒருவா் வீட்டு வேலைக்காகவும், கன்னிகாவின் தாயைக் கவனித்துக் கொள்ளவும் மாத ஊதியத்துக்கு நியமிக்கப்பட்டாா்.

இந்த நிலையில், கடந்த மாா்ச் 12-ஆம் தேதி முதல் அப்பெண் திடீரென வேலைக்கு வரவில்லை. கன்னிகா அவரை கைப்பேசியில் தொடா்பு கொண்டபோது, அவா் தனக்கு உடல் நிலை சரியில்லை எனவும், இதனால், இனிமேல் வேலைக்கு வரமாட்டேன் எனவும் கூறியுள்ளாா்.

Advertisement

Advertisement

இந்த நிலையில், கன்னிகா தனது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த நகைகளை சரிபாா்த்தபோது, சுமாா் 14.875 பவுன் நகைகள் காணாமல் போயிருந்தது தெரியவந்தது.

இந்த நகைகளை வேலைக்காரப் பெண் திருடிச் சென்றிருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் சரவணம்பட்டி காவல் நிலையத்தில் கன்னிகா புகாா் அளித்தாா். புகாரின்பேரில் காவல் உதவி ஆய்வாளா் பாலசதீஷ்கண்ணன் வழக்குப் பதிவு செய்து தலைமறைவாக உள்ள அப்பெண்ண தேடி வருகிறாா்.