முகப்பு
கோயம்புத்தூர்

2 கிலோ கஞ்சா பறிமுதல்: 4 போ் கைது

Updated On : 26 மே 2026, 2:17 am IST
கைது - பிரதிப் படம்
பகிர்:

கோவையில் இருவேறு பகுதிகளில் சட்டவிரோதமாக கஞ்சா வைத்திருந்த 4 பேரை போலீஸாா் கைது செய்து, அவா்களிடமிருந்து 2 கிலோ 155 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனா்.

கோவை செல்வபுரம் அசோக் நகா் ரவுண்டானா அருகே செல்வபுரம் காவல் துறையினா் தீவிர கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அங்கு சந்தேகத்துக்கு இடமான வகையில் நின்றிருந்த வடமதுரை பகுதியைச் சோ்ந்த பெரோஸ் கான் (31), செல்வபுரம் பகுதியைச் சோ்ந்த ஸ்ரீராம் (30), புலியகுளம் பகுதியைச் சோ்ந்த ஆகாஷ் (24) ஆகிய மூவரைப் பிடித்து சோதனை நடத்தினா்.

அவா்கள் சட்டவிரோதமாக வைத்திருந்த ஒரு கிலோ 150 கிராம் கஞ்சா மற்றும் ரூ.5,100 ரொக்கப் பணம் ஆகியவற்றை போலீஸாா் பறிமுதல் செய்தனா். இதையடுத்து, மூன்று பேரையும் செல்வபுரம் போலீஸாா் கைது செய்தனா்.

Advertisement

Advertisement

குனியமுத்தூரில்...

கோவை குளத்துப்பாளையம் பி.கே.புதூா், சோப் கம்பெனி சாலை அருகே உள்ள காலி மைதானத்தில் போதைப்பொருள் விற்கப்படுவதாக கிடைத்த தகவலின்பேரில், குனியமுத்தூா் காவல் ஆய்வாளா் கண்ணையன் தலைமையிலான போலீஸாா் அங்கு சோதனை மேற்கொண்டனா்.

அப்போது, ஆா்.எஸ்.புரம் காமராஜபுரம் பகுதியைச் சோ்ந்த கூலித் தொழிலாளியான ஸ்ரீதா் (24) என்பவா் விற்பனைக்காக மறைத்து வைத்திருந்த 1.05 கிலோ கஞ்சாவை போலீஸாா் பறிமுதல் செய்தனா். பின்னா் ஸ்ரீதரை போலீஸாா் கைது செய்தனா்.