ஈரோடு

உலக மண் வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம்

DIN

ஈரோடு மாவட்டம், கவுந்தப்பாடி அருகேயுள்ள பாப்பாங்காட்டூரில் கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக மாணவிகள் மற்றும் உழவர் விவாதக் குழு சார்பாக உலக மண்வள தின விழா விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெற்றது.
நுகர்வோர் பாதுகாப்பு அமைப்பு மற்றும்  தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவர் பா.அ.சென்னியப்பன் தலைமை வகித்தார்.
பால் கூட்டுறவு சங்கத் தலைவர் மா.சுப்ரமணியம், உழவர் குழுத் தலைவர் ஆர்.கோவிந்தராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பல்கலைக்கழக மாணவி பூர்வசந்தியா வரவேற்றுப் பேசினார்.
மண்வளம் பற்றிய விழிப்புணர்வுத் தொகுப்பை உழவர் விவாதக் குழு அமைப்பாளர் பா.மா.வெங்கடாசலபதி வெளியிட்டார். முன்னோடி உழவர்கள் பி.ஈஸ்வரமூர்த்தி, செங்கோட்டையன் பெற்றுக் கொண்டனர்.         
பல்கலைக்கழக மாணவிகள் கிருத்திகா, பிரகதி, சாருமதி ஆகியோர் விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தனர்.
நிகழ்ச்சியில், துணை வேளாண்மை அலுவலர் பழனிசாமி, உதவி வேளாண்மை அலுவலர் பி.சுரேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.   மாணவி பிரியதர்ஷினி நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

SCROLL FOR NEXT