ஈரோடு

காவல் துறை எச்சரிக்கை

DIN

ஆசனூர்-திம்பம் மலைப் பாதையில் நடந்த விபத்தில்  இறந்ததாகப் பொய்யான தகவல் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் துறையினர் எச்சரித்துள்ளனர்.
சத்தியமங்கலத்தை அடுத்துள்ள  திம்பம் மலைப் பாதையில் கடந்த 4ஆம் தேதி மைசூருக்குச் சென்று கொண்டிருந்த தனியார் பேருந்தும், லாரியும் சீகைக்காய்ப்பள்ளம் என்ற இடத்தில் மோதிக் கொண்டன. இதில், பேருந்தின் முகப்பு கண்ணாடி உடைந்தது. பயணிகளுக்கு பாதிப்பு ஏற்படவில்லை.
இந்நிலையில், இந்த விபத்தில் 3 பேர் உயிரிழந்ததாகப் பொய்யான தகவல் கட் செவி அஞ்சலில் பரவியது. இதற்கு ஆசனூர் காவல்ஆய்வாளர் சிவக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். இதுபோன்ற பொய்யான தகவலைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT