ஈரோடு

மாநில யோகா போட்டி: கொங்கு பள்ளி மாணவர் முதலிடம்

DIN

தமிழ்நாடு யோகா, விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், திருப்பூர் சரணாலயா இண்டர்நேஷனல் மாண்டிச்சேரி பள்ளியில் 62-ஆவது மாநில அளவிலான யோகா போட்டிகள் அண்மையில் நடைபெற்றது. இதில், கொங்கு பள்ளி மாணவர் முதலிடம் பிடித்துள்ளார்.
 இப்போட்டியில், கொங்கு வேளாளர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த 9-ஆம் வகுப்பு மாணவர் பி.தருண், 14 முதல் 18 வயதுக்கு உள்பட்டோருக்கான பிரிவில் கலந்துகொண்டு முதல் பரிசையும், ஒட்டுமொத்த சாம்பியனுக்கான போட்டியில் மூன்றாமிடமும் பெற்றுள்ளார்.
 வெற்றி பெற்ற மாணவரையும், பயிற்சி அளித்த யோகா ஆசிரியர்கள் என்.நல்லசிவம், எம்.தனலட்சுமி  ஆகியோரையும் பள்ளித் தலைவர் ஜி.யசோதரன், துணைத் தலைவர் எஸ்.குமாரசாமி, தாளாளர் டி.என்.சென்னியப்பன், பொருளாளர் பி.ஆர்.சுப்பிரமணியன், இணைச் செயலாளர் கே.பி.முத்துராமலிங்கம், நிர்வாகக் குழுவினர், முதல்வர் எம்.முருகன் ஆகியோர் வாழ்த்தினர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேட்டூர் கொளத்தூர் பகுதியில் சூறைக்காற்று: 5 ஆயிரம் வாழைகள் சேதம்

லக்னௌ அணிக்கு 236 ரன்கள் இலக்கு நிர்ணயித்த கேகேஆர்!

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

SCROLL FOR NEXT