ஈரோடு

மண் கடத்தலைத் தடுத்த அதிகாரிக்கு கொலை மிரட்டல்

DIN

பவானியை அடுத்த அம்மாபேட்டை அருகே ஏரியில் மண் கடத்தலைத் தடுக்க முயன்ற கிராம நிர்வாக அலுவலருக்கு கொலை மிரட்டல் விடுத்த மூவரை போலீஸார் தேடி வருகின்றனர்.
 அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி ஏரியில் அனுமதியின்றி லாரிகள், டிராக்டர்களில் மண் கடத்தப்படுவதாக கிராம நிர்வாக அலுவலருக்கு சனிக்கிழமை தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, சம்பவ இடத்துக்குச் சென்ற கிராம நிர்வாக அலுவலர் முருகானந்தம் முறையான அனுமதியின்றி மண் எடுக்கக் கூடாது எனவும், ஏரியை விட்டு வெளியேறுமாறும் கூறியுள்ளார். இதற்கு எதிர்ப்புக் கிளம்பியதோடு மண் அள்ளிக் கொண்டிருந்தவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  
 இந்நிலையில், மண் கடத்தலைத் தடுத்தபோது தன்னைப் பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்ததாக அம்மாபேட்டை போலீஸில் கிராம நிர்வாக அலுவலர் புகார் அளித்தார்.
 அதன்பேரில், முகாசிப்புதூரைச் சேர்ந்த பழனிசாமி மகன் முருகன் (35), குமாரசாமி மகன் கிருஷ்ணமூர்த்தி (34), காளியண்ண கவுண்டர் மகன் வெங்கடாசலம் (45) ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாய்ப்பை நழுவவிடாதீர்கள்... நீதிமன்றத்தில் ஏராளமான வேலைவாய்ப்புகள்!

கோவிஷீல்டால் 10 லட்சம் பேரில் 7 பேருக்குத்தான்..: ஐசிஎம்ஆர் முன்னாள் விஞ்ஞானி தகவல்

தில்லியில் 60 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

இனிமேல் சிங்கிள்!

சோதனைமேல் சோதனை.. ஹார்திக் பாண்டியாவுக்கு மீண்டும் அபராதம்!

SCROLL FOR NEXT