ஈரோடு

உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா

DIN

கோபியில் அறம் நேசம் தன்னார்வ அமைப்பின் சார்பில் உலக மாற்றுத் திறனாளிகள் தின விழா சனிக்கிழமை நடைபெற்றது.
 இதில், மாற்றுத் திறனாளிகள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது. பேரணியை கோபி காவல் துறை ஆய்வாளர் எஸ்.பாலமுரளிசுந்தரம் தொடக்கி வைத்தார். பேரணியானது காந்தி சிலை அருகே இருந்து புறப்பட்டு கோபி வைரவிழா மேல்நிலைப் பள்ளியில் நிறைவடைந்தது.
 தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசமாக மூன்று சக்கர மிதிவண்டி, வாக்கர், ஊன்றுகோல் உள்ளிட்டவை வழங்கப்பட்டது. மாற்றுத் ற்திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டுப் போட்டிகள், பாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.
குள்ளம்பாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர் கே.கே.மயில்சாமி அனைவருக்கும் மதிய உணவு வழங்கினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை அறம் - நேசம் அமைப்பின் தலைவர் சக்தி சரவணன், நிர்வாகிகள் செய்திருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பழனி கோயிலுக்கு ரூ.36.51 லட்சத்துக்கு கரும்பு சா்க்கரை கொள்முதல்

கழனி உழவா் உற்பத்தியாளா் நிறுவனத்தில் வேளாண் மாணவிகளுக்கு பயிற்சி

திரௌபதி அம்மன் கோயில் திருவிழா மே 13-இல் தொடக்கம்

விறுவிறுப்படையும் பாம்பன் புதிய ரயில்வே பாலம் கட்டுமானப் பணி

பளியா் பழங்குடியினா் இதுவரை அரசு பணி வாய்ப்பே பெறவில்லை

SCROLL FOR NEXT