ஈரோடு

தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரைப் போல பேசி ரூ. 8.87 லட்சம் திருட்டு:இருவர் கைது

DIN

ஈரோட்டில் தனியார் மருத்துவமனை நிர்வாக இயக்குநரைப் போலப் பேசி காசாளரிடம் ரூ. 8.87 லட்சத்தைக் கையாடல் செய்த இருவரை போலீஸார் கைது செய்துள்ளனர்.
ஈரோடு பெருந்துறை சாலையில் செயல்பட்டுவரும் தனியார் மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மருத்துவர் தனபாக்கியம். இவர், நவம்பர் 6-ஆம் தேதி கோவைக்குச் சென்ற நேரத்தில், மருத்துவமனைக் காசாளரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், மருத்துவர் தனபாக்கியம் குரலில் பேசி, வசூல் பணத்தைத் தான் அனுப்பும் நபரிடம் கொடுத்தனுப்புமாறு கூறியுள்ளார்.
அதை நம்பிய காசாளர் கார்த்திக் (26), அங்கு வந்த நபரிடம் ரூ. 8.87 லட்சத்தைக் கொடுத்து அனுப்பியுள்ளார். இதையடுத்து, கோவையில் இருந்து ஈரோடு திரும்பிய மருத்துவர் தனபாக்கியம் அதுகுறித்து தகவலறிந்து அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, வீரப்பன்சத்திரம் போலீஸில் காசாளர் கார்த்திக் புகார் தெரிவித்தார். அதன்பேரில், போலீஸார் வழக்குப் பதிவு செய்து சி.சி.டி.வி. கேமரா பதிவு மற்றும் செல்லிடப்பேசித் தொடர்புகளை ஆய்வு செய்து, விசாரணை நடத்தினர்.
அதில், ஏற்கெனவே மருத்துவமனையில் காசாளராகப் பணியாற்றிய ஈரோடு, கச்சேரி வீதியைச் சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அருண்சங்கர் (32), அவரது தம்பி சதீஷ் சம்பத் (29) ஆகியோர் இதில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, இருவரையும் கைது செய்த போலீஸார், அவர்களிடம் இருந்து ரூ. 8.87 லட்சத்தை மீட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சூப்பா்சோனிக் ஏவுகணை உதவியுடன் தாக்கும் டாா்பிடோ ஆயுதம் வெற்றிகரமாக பரிசோதனை

திருவண்ணாமலை - சென்னை புதிய மின்சார ரயில் சேவை ஒத்திவைப்பு!

இஸ்ரேலுடனான உறவை முறித்த கொலம்பியா!

உப்பு சத்தியாகிரக தண்டி யாத்திரை நினைவுக் குழுவினருக்கு வரவேற்பு

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

SCROLL FOR NEXT