பவானிசாகர் வனப் பகுதியில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயிலுக்கு சிகிச்சை
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனப் பகுதியில் 4 நாள்களுக்கு முன்னர் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயில் சிகிச்சைக்குப் பின் வியாழக்கிழமை வனப் பகுதியில் விடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனப் பகுதியில் 4 நாள்களுக்கு முன்னர் காலில் காயத்துடன் மீட்கப்பட்ட ஆண் மயில் சிகிச்சைக்குப் பின் வியாழக்கிழமை வனப் பகுதியில் விடப்பட்டது.
ஈரோடு மாவட்டம், பவானி சாகர் வனச் சரகத்துக்கு உள்பட்ட விலாமுண்டி வனத் துறையினர் கடந்த திங்கள்கிழமை ரோந்து சென்றனர். அப்போது, ஒன்றரை வயது ஆண் மயில் ஒன்று வலது காலில் அடிபட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தது. இந்த மயிலை மீட்ட வனத் துறையினர் சிகிச்சைக்காக சத்தியமங்கலம் வன கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர்.
அங்கு வன கால்நடை மருத்துவ அலுவலர் கே.அசோகன் நான்கு நாள்களாக அந்த மயிலுக்கு சிகிச்சை அளித்து வந்தனர். இதில், காயம் குணமடைந்த மயிலை பவானி சாகர் வனப் பகுதியில் வியாழக்கிழமை பாதுகாப்பாக வனத் துறையினர் விடுவித்தனர்.