கமல் - ரஜினி திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது?
கமல் - ரஜினி திரைப்படம் குறித்து...
நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் ஹாசன் இணைந்து நடிக்கும் திரைப்படம் குறித்து புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
நடிகர்கள் கமல் ஹாசனும் ரஜினிகாந்தும் இயக்குநர் நெல்சன் இயக்கத்தில் 47 ஆண்டுகள் கழித்து மீண்டும் இணைந்து நடிக்க உள்ளனர்.
இப்படத்தை ரெட் ஜெயண்ட் நிறுவனம் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார்.
Advertisement
Advertisement
இதன் அறிவிப்பு புரோமோ வெளியாகி ரசிகர்களிடம் மிகப்பெரிய ஆர்வத்தை ஏற்படுத்தியதுடன் அனிருத்தின் பின்னணி இசை டிரெண்டிங் ஆனது.
மேலும், இப்படத்தை முழுமையாக பிலிம் கேமராவில் படமாக்க இயக்குநர் நெல்சன் முடிவு செய்துள்ளாராம்.
இந்த நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு இந்தாண்டு அக்டோபர் மாதம் துவங்கவுள்ளதாகவும் படத்தை 2027 தீபாவளி வெளியீடாகத் திரைக்குக் கொண்டு வரலாம் என்றும் புதிய தகவல் வெளியாகியுள்ளது.
actors kamal haasan and rajinikanth starring movie shoot will begin this year october
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.