முகப்பு
ஈரோடு

பெருந்துறையில் ரூ. 1.70 கோடிக்கு கொப்பரை ஏலம்

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 6:08 PM
பகிர்:

பெருந்துறை வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில், ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம் புதன்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை, அதன் சுற்றுவட்டாரப் பகுதி விவசாயிகள் 3,221 மூட்டைகளில் 1,50,000 கிலோ கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.  முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 118.10-க்கும், அதிகபட்சமாக ரூ. 122.85-க்கும்  விற்பனையானது. இரண்டாம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ. 55.50 -க்கும், அதிகபட்சமாக  ரூ. 116. 70-க்கும் விற்பனையானது. மொத்தம் ஒரு கோடியே 70 லட்சம் ரூபாய்க்கு கொப்பரை ஏலம்போனதாக சங்கத் தலைவர் அருள்ஜோதிசெல்வராஜ் தெரிவித்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →