ஈரோடு

ஜாக்டோ-ஜியோ-கிராப் கூட்டமைப்புக் கூட்டம்

DIN

ஜாக்டோ-ஜியோ-கிராப்  கூட்டமைப்பின் ஈரோடு மாவட்ட கிளை ஆலோசனைக் கூட்டம்  ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 
கூட்டத்துக்கு அமைப்பின் மாநில உயர்நிலைக் குழு உறுப்பினர் நேரு தலைமை வகித்தார். தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர்கள் கழக மாவட்டச் செயலர் சோமசுந்தரம், தமிழக தமிழ் ஆசிரியர்கள் கழக மாவட்டச் செயலர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
காவிரி மேலாண்மை வாரியத்தை மத்திய அரசு உடனடியாக அமைக்க வேண்டும். அதற்கு தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்க வேண்டும். புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வரவேண்டும். 7 -ஆவது ஊதியக் குழு பரிந்துரையின் 21 மாத நிலுவைத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும். அனைத்து நிலைகளிலும் உள்ள ஆசிரியர்களின் 7-ஆவது ஊதியக் குழு முரண்பாடுகளைக் களைந்திடவேண்டும். ஆசிரியர், அலுவலர் பணியிடங்களைக் குறைப்பதற்காக நிர்வாகச் சீர்திருத்தம் என்ற பெயரில் அமைக்கப்பட்ட ஆதிசேஷய்யாவின் தலைமையிலான குழுவைக் கலைக்க வேண்டும். 
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி ஈரோடு மாவட்டத்தில் ஏப்ரல் 24 முதல் பிளஸ்-2, பிளஸ்-1, எஸ்எஸ்எல்சி பொதுத் தேர்வுகளின் விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியைப் புறக்கணித்து மறியல் போராட்டத்தில் ஈடுபடுவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள்  நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பதவி உயர்வு பெற்ற பட்டதாரி மற்றும் தமிழ் ஆசிரியர் கழக மாவட்டத் தலைவர் ரவி, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியப் பொறுப்பாளர்கள் சவுந்தரராஜன், முரளி, தமிழக ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் சரவணன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாமக்கல்: பிளஸ் 2 பொதுத் தேர்வில் 96.10% தேர்ச்சி

ஒடிஸாவில் பாஜக முதல்வர் ஜூன் 10-ல் பதவியேற்பார்: மோடி

வைரலாகும் தக் லைஃப்!

பிளஸ்2 பொதுத்தேர்வு: திருவள்ளூர் மாவட்டத்தில் 23,401 பேர் தேர்ச்சி

பிளஸ் 2 பொதுத் தேர்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தேர்ச்சி

SCROLL FOR NEXT