ஈரோடு

சுகாதார நிலைய துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வலியுறுத்தல்

DIN

சுகாதார நிலைய துப்புரவுப் பணியாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய துப்புரவுப் பணியாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
ஈரோடு, வீரப்பன்சத்திரத்தில் உள்ள சங்க அலுவலகத்தில் துணைத் தலைவர் மலர்விழி தலைமை யில் வியாழக்கிழமை நடைபெற்ற ஆண்டு பேரவைக் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிறப்பு அழைப்பாளராக சங்கத்தின் மாநிலத் தலைவர் சண்முகம் கலந்துகொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். 
இக்கூட்டத்தில், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது தொடர்பாக 2013-ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட  அரசாணையின்படி 3 ஆண்டுகள் பணி முடித்தவர்களைப் பணி நிரந்தரம் செய்து, அதன் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். 
1.10.2010 முதல் 7-ஆவது ஊதியக் குழுவின் நிலுவைத் தொகையை வழங்க வேண்டும். தற்போது 12 மணி நேரம் பணியாற்றி வரும் துப்புரவுப் பணியாளர்களைப் பணிவரன் முறை செய்து 8 மணி நேர வேலையாக மாற்ற வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களைத் தனியாருக்கு விடும் முடிவை அரசு கைவிட வேண்டும். 
அரசாணைப்படி சிறப்பு காலமுறை ஊதியம் வழங்குவது தொடர்பாக இணை இயக்குநர் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் 15 நாள்களுக்குள் சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால், இதுவரை வழங்கவில்லை. சிறப்பு காலமுறை ஊதியம் வழங்கவும், நிலுவைத் தொகையை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடுவது. மேலும், சென்னையில் உள்ள பொது சுகாதாரத் துறை இயக்குநர் அலுவலகத்தில் காத்திருப்புப் போராட்டம் நடத்துவது  என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
  இதில், நிர்வாகிகள் சத்யா, தமிழரசி, சசிகலா, சுதா, ஜோதி, செல்வி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டிஎன்ஏ போஸ்டர்!

இளவரசிகள்..

டி20 உலகக் கோப்பைக்குத் தயாராக ரோஹித் சர்மாவுக்கு ஓய்வு தேவை: முன்னாள் ஆஸி. கேப்டன்

காஷ்மீரில் தீவிரவாத அமைப்புத் தலைவர் சுட்டுக்கொலை

வேலூரில் தூய்மைப் பணியாளர் மீது மோதிய இருசக்கர வாகனம்: மரித்துப்போனதா மனிதம்?

SCROLL FOR NEXT