ஈரோடு

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரி  விழா

DIN

கொடுமுடி மகுடேஸ்வரர் கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, மகுடேஸ்வரர் கோயில் வளாகத்தில் பரத நாட்டிய நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 மகா சிவராத்திரியையொட்டி மும்மூர்த்திகள் ஸ்தலமான கொடுமுடி  மகுடேஸ்வரர் கோயிலில் சிவனுக்கு சிறப்பு அலங்காரங்கள், ஆராதனைகள் நடைபெற்றன. மாலை 6 மணிக்கு கரூர் ஆடல் வல்லான் நாட்டியாலயா குழுவினரின் பரத நாட்டிய நிகழ்ச்சி அரங்கேற்றம்  நடைபெற்றது.
 தொடர்ந்து, மகுடேஸ்வரருக்கு முதல்கால பூஜை, இரண்டாம் கால பூஜை, மூன்றாம் கால பூஜை, நான்காம் கால பூஜை என இரவு முழுவதும் சிவராத்திரி பூஜைகள் நடைபெறவுள்ளன. இரவு முழுவதும் நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் கலந்துகொள்வதற்காக ஏராளமான பக்தர்கள் கோயில் வளாகத்தில் குவிந்துள்ளனர்.
 சிவகிரி வேலாயுதசாமி கோயிலில் 1,008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. மேலும், கொடுமுடி வட்டாரத்தில் உள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி பூஜைகள் இரவு முழுவதும் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

டேவிட் வார்னரின் சாதனையை சமன் செய்த விராட் கோலி!

காங். ஆட்சியில் மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை அமல்படுத்த திட்டம் -பிரதமர் மோடி பிரசாரம்

நீ, நீயாகவே இரு, உலகம் அனுசரித்துப் போகும்! எதிர்நீச்சல் ஜனனிதான்...

வரலாறு காணாத வெப்பத்திற்கு காரணம் என்ன? : ரமணன் பேட்டி

SCROLL FOR NEXT