முகப்பு
ஈரோடு

சித்தோடு அருகே வீட்டில் இருந்த 42 பவுன் மாயமானதாகப் புகார்

சித்தோடு அருகே வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 42 பவுன் நகைகள் மாயமானதாக பழைய இரும்பு வியாபாரி அளித்த புகாரின் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 30 ஜனவரி, 2024 at 12:18 PM
பகிர்:

சித்தோடு அருகே வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 42 பவுன் நகைகள் மாயமானதாக பழைய இரும்பு வியாபாரி அளித்த புகாரின் மீது போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். 
சித்தோட்டை அடுத்த நசியனூர் வாய்க்கால்மேட்டைச் சேர்ந்தவர் மாதசாமி (38). பழைய இரும்பு வியாபாரியான இவர், அப்பகுதியில் உள்ள வாடகை வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். 
இந்நிலையில், சித்தோடு காவல் நிலையத்தில் தனது வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 42 பவுன் நகைகள் மாயமானதாகவும், மர்ம நபர்கள் எடுத்துச் சென்றிருக்கலாம் என புதன்கிழமை புகார் தெரிவித்தார். 
தனது பீரோ சாவியை எடுத்துச் சென்று, மர்ம நபர்கள் இவ்வாறு திருடிச் சென்றிருக்கலாம் எனவும் சந்தேகம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து, சித்தோடு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

முழு கட்டுரையைப் படிக்க →