ஈரோடு

நந்தா பொறியியல் கல்லூரியில்  தொழில்நுட்பக் கருத்தரங்கம்

DIN

நந்தா பொறியியல் (தன்னாட்சி) கல்லூரியில் சென்னை  குவி மென்பொருள் நிறுவனம் சார்பில் 24 மணி நேர  தொடர்நிரலாக்கக் கருத்தரங்கம்அண்மையில் நடைபெற்றது.
இதன் தொடக்க விழாவுக்கு, நந்தா கல்வி குழுமங்களின் தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.
இந் நிகழ்ச்சியில், குவி மென்பொருள் நிறுவன செயல் அலுவலர் அருண்பிரகாஷ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று பேசினார்.  நந்தா கல்வி குழுமங்களின் முதன்மைக் கல்விஅலுவலர் ஆறுமுகம், கல்லூரிச் செயலர்கள் எல். நந்தகுமார்பிரதீப்,  எஸ்.திருமூர்த்தி, கல்லூரி முதல்வர் என்.ரங்கராஜன் ஆகியோர் பேசினர்.  தமிழக அளவில் பல்வேறு கல்லூரிகளில் இருந்தும்  சுமார் 500 -க்கும்  மேற்பட்ட மாணவ, மாணவியர் குழுமங்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு குழுவுக்கும்  ஒரு திட்ட அறிக்கை  வழங்கப்பட்டது.  அந்த திட்ட அறிக்கையை 24 மணி நேரத்துக்குள்  மாணவர்கள் திட்டமிட்டு முடிக்க வேண்டும். இதற்குத் தேவையான இணைய வசதி, கணினி வசதி, மாணவர்களுக்கான உணவு மற்றும் இருப்பிட வசதி போன்றவை கல்லூரி சார்பில்  ஏற்பாடு  செய்யப்பட்டது. கல்லூரி இயக்குநர் விஜயகுமார் வரவேற்றார். முனைவர் சி.சிவா நன்றி கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்தோ்வுகளில் வேலூா் பின்தங்குவதற்கான காரணங்களை அறிய சமூக ஆய்வு

மீஞ்சூா் வரதராஜ பெருமாள் கோயில் பிரம்மோற்சவம்

8% அதிகரித்த நிலக்கரி இறக்குமதி

முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

30 கிலோ கஞ்சா கடத்தல்: 6 போ் கைது

SCROLL FOR NEXT