ஈரோடு

அவல்பூந்துறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 45 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் சனிக்கிழமை நடைபெற்றது.
அவல்பூந்துறை சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள் 811 மூட்டைகளில் 40 ஆயிரத்து 181 கிலோ எடையுள்ள கொப்பரைகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர்.
இதில், முதல் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 136.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 132.65-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 132.55-க்கும், குறைந்தபட்சமாக ரூ. 80.65- க்கும் என மொத்தம் ரூ. 45 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.
இதேபோல, 3,573 கிலோ எடையுள்ள 14,171 தேங்காய்களை விவசாயிகள் விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், அதிக விலையாக டன் ரூ. 53 ஆயிரத்து 900, குறைந்த விலையாக டன் ரூ. 33 ஆயிரத்து 340 என ரூ. 1 லட்சத்துக்கு ஏலம் நடைபெற்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 நாள் வேலை திட்ட ஊதியம் ரூ. 400 ஆக உயர்த்தப்படும் -ராகுல் காந்தி

தக் லைஃப் படத்தின் முக்கிய அறிவிப்பை வெளியிட்ட படக்குழு!

ராயன் அப்டேட்!

டி20 உலகக் கோப்பைக்கு பயங்கரவாத அச்சுறுத்தல்!

வானம், நிலவு, கடல்.. அஞ்சலி!

SCROLL FOR NEXT