ஈரோடு

சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் வேதியியல் ஆய்வுக்கூடம் திறப்பு

DIN

பவானியை அடுத்த ஆப்பக்கூடல் சக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் ரூ. 1.84 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட  நவீன வசதிகளுடன் கூடிய வேதியியல் ஆய்வுக்கூடம் திறப்பு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. 
விழாவுக்கு,  சக்தி நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர் என்.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து கட்டடத்தை திறந்து வைத்தார்.  ஆட்சிமன்றக் குழு உறுப்பினர் எஸ்.என்.பாலசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார்.  கல்லூரி முதல்வர் கே.ஆர்.முத்துசாமி வரவேற்றார். நவீனப் பாடத் திட்டத்துக்கேற்ப ரூ. 1.84 லட்சம் மதிப்பில் இந்த ஆய்வுக்கூடம்,  மாணவ, மாணவியரின் தேவைக்கேற்ப திறக்கப்பட்டுள்ளது. 
பெருந்துறை அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி பி.எஸ்.தமிழ்ச்செல்வி, கோவை மகளிர் அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் எஸ்.பி.சந்திரன்,  என்.ஐ.ஏ.கல்வி நிறுவனத்தின் செயலர் சி.ராமசாமி,  சக்தி சர்க்கரை ஆலை பொது மேலாளர் என்.செழியன்,  குமரகுரு வேளாண்மை கல்லூரி முதன்மையர் ரவிக்குமார் தியோடர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
 மேலும்,  ரோட்ராக்ட் அமைப்பு சார்பில் கல்லூரி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டன.  நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வேதியியல் துறை மூத்த பேராசிரியர் கே.மோகன் தலைமையில் பணியாளர்கள் செய்திருந்தனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT