முகப்பு
ஈரோடு

சென்னிமலை எம்.பி.என்.எம்.ஜெ. பொறியியல் கல்லூரியில் சர்வதேசக் கருத்தரங்கு

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. 

Updated On : 29 மார்ச், 2018 at 8:37 AM
பகிர்:

சென்னிமலை எம்.பி.நாச்சிமுத்து எம்.ஜெகநாதன் பொறியியல் கல்லூரியில் சர்வதேச அளவிலான தொழில்நுட்பக் கருத்தரங்கு புதன்கிழமை நடைபெற்றது. 
இக்கருத்தரங்குக்கு கல்லூரித் தாளாளர் வசந்தா சுத்தானந்தன் தலைமை வகித்து, கருத்தரங்கைத் தொடக்கிவைத்தார். கல்லூரியின் கட்டடவியல் துறைத் தலைவர் ஆர்.கவிதா வரவேற்றார். முதல்வர் பி.செங்குட்டுவன்,  கல்லூரி ஆலோசகர்கள் ஆர்.பாலசுப்பிரமணியன், எம்.வி.தெய்வசிகாமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
சிறப்பு அழைப்பாளராக, நாமக்கல் செல்வம் காலேஜ் ஆஃப் டெக்னாலஜி அகடமிக் டீன் பி.மணிமேகலை பங்கேற்று, கருத்தரங்கு மலரை வெளிட்டுப் பேசினார். 
இக்கருத்தரங்கில், சர்வதேச அளவில் 200-க்கும் மேற்பட்ட ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. 
கல்லூரியின் கணினி அறிவியல் துறைத் தலைவர் கே.என்.சிவகுமார் நன்றி கூறினார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.