பல்லடம் சாலை விபத்தில் முதியவர் பலி
பல்லடம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்த
பல்லடம் அருகே சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
ஈரோடு மாவட்டம், சென்னிமலை நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராஜேந்தர் (60). பெருந்துறை சிப்காப்ட் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்தார். அவருக்கு கன்னியம்மாள் (55) என்ற மனைவியும், சுரேஷ்குமார் (26), ஜோதிகுமார் (24) ஆகிய மகன்கள் உள்ளனர். இவர் கடந்த 18ஆம் தேதி அன்று மனைவியுடன் பொள்ளாச்சி அருகேயுள்ள ஆனைமலை மாசாணியம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டுவிட்டு பைக்கில் வீட்டுக்குத் திரும்பிக் கொண்டிருந்தார். பல்லடம் அருகே வெங்கிட்டாபுரம் பகுதியில் இரவு 7 மணிக்கு வந்தபோது பைக் இடறி கீழே விழுந்தார். அதில் ராஜேந்தருக்கு
தலையில் படுகாயமும், கன்னியம்மாளுக்கு சிறு காயமும்
ஏற்பட்டது. அவர்ளுக்கு பல்லடம் அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை அளித்து பின்னர்
கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் ராஜேந்தர் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை உயிரிழந்தார்.
இதுகுறித்து பல்லடம் போலீஸார் வழக்குப் பதிவுசெய்து விசாரித்து வருகின்றனர்.