ஈரோடு

ஆற்றில் மூழ்கிய நண்பரை மீட்கச் சென்ற இருவர் உயிரிழப்பு

DIN

பவானிஆற்றில் மூழ்கி உயிருக்குப் போராடிய நண்பர்களைக் காப்பாற்றச் சென்ற இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள பவானிசாகர் அணையில் இருந்து பவானிஆற்றுக்குத் திறந்துவிடப்படும் தண்ணீர் புங்கார் வழியாகச் செல்கிறது.
அணையில் இருந்து குடிநீருக்காக 150 கனஅடி நீர் திறந்துவிடப்படுவதால், பவானிஆற்றில் நீரோட்டமின்றி தண்ணீர் தேங்கி நிற்கிறது.
அன்னூரை அடுத்துள்ள அல்லிக்காரன்பாளையத்தைச் சேர்ந்த பிரவீண்பாலன்(18), ஜெகதீசன் (15), ஜீவாநாதன் (15), ரகுநாதன் (16), முத்துகுமார் (18), கோவை கல்லூரி மாணவர் அருண்குமார் (18), மின்பணியாளர் பரணிகுமார் (19) ஆகிய 7 பேரும் சனிக்கிழமை பவானிசாகர் அணைக்கு சனிக்கிழமை வந்தனர்.
அங்கு அணைப் பூங்காவைச் சுற்றிப் பார்த்துவிட்டு புங்கார் பவானி ஆற்றில் பிரவீண்பாலன், ஜீவாநாதன், பரணிகுமார், அருண்குமார் ஆகிய 4 பேரும் குளித்தனர். மற்ற மூவரும் கரையில் இருந்தனர். இதில் பிரவீண்பாலன் ஆழமான பகுதிக்குச் சென்றபோது நீரில் மூழ்கினார்.
இதைக் கண்ட ஜீவாநாதன், அவரைக் காப்பாற்ற நண்பர்களை அழைத்தார். அவருக்குத் துணையாக பரணிகுமாரும், அருண்குமாரும் சென்று இருவரையும் மீட்டு பத்திரமாக கரைக்கு அனுப்பி வைத்தனர். அப்போது எதிர்பாராதவிதமாக இருவரும் ஆழமான சுழலில் சிக்கி நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த சத்தியமங்கலம் தீயணைப்பு வீரர்கள், உயிரிழந்த பரணிகுமார், அருண்குமார் ஆகியோரின் உடல்களை மீட்டனர்.
இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

ஒடிஸாவில் ஹேமந்த் சோரனின் சகோதரி போட்டி!

SCROLL FOR NEXT