முகப்பு
ஈரோடு

சத்தியமங்கலத்தில் கோகுலாஷ்டமி கொண்டாட்டம்

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Updated On : 3 செப்டம்பர், 2018 at 6:50 AM
பகிர்:

கோகுலாஷ்டமியை முன்னிட்டு, சத்தியமங்கலம் வேணுகோபால சுவாமி ஆலயத்தில் ஞாயிற்றுக்கிழமை நடந்த சிறப்பு பூஜையில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
சத்தியமங்கலம் ஸ்ரீ வேணுகோபால சுவாமி ஆலயத்தில்  சிறப்பு பூஜையுடன் விழா துவங்கியது. இதையொட்டி  மலர் அலங்காரத்தில்  ரங்கநாதப் பெருமாளும், ஸ்ரீ லட்சுமிநாராயண சுவாமியும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். 
கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற கீதா ஹோமத்தில் 50 பக்தைகள் கலந்துகொண்டு,  700 பகவத்கீதை சுலோகங்களைப் பாடினர்.  
நண்பகல் 12 மணிக்கு அபிஷேகமும், மாலை 7 மணிக்கு சுவாமி புற்பாடும் அதைத் தொடர்ந்து உறியடி விழாவும் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை கோயில் அர்ச்சகர் ஆனந்த் ஐயர் தலைமையில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.