முகப்பு
ஈரோடு

ஸ்ரீ சுவாமி விவேகானந்தா பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா

பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 

Updated On : 4 செப்டம்பர், 2018 at 1:06 AM
பகிர்:

பெருந்துறை ஸ்ரீ சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் கிருஷ்ண ஜயந்தி விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது. 
 விழாவுக்கு, பள்ளித் தலைவர் டி.கே.சின்னசாமி தலைமை வகித்தார். தாளாளர் எல்.சென்னியப்பன் முன்னிலை வகித்தார். முதல்வர் கே.எஸ்.சுப்பிரமணியன் வரவேற்றார். 
விழாவையொட்டி, பள்ளிக் குழந்தைகள் கிருஷ்ணன், ராதை வேடமணிந்து வந்திருந்தனர். கிருஷ்ண ஜயந்தியைப் பற்றி தங்கள் கருத்துகளை எடுத்துரைத்தனர். 
பின்னர், குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.
 விழாவில், பள்ளிப் பொருளாளர் சி.ஆர்.மாணிக்கமூர்த்தி, இணைச் செயலாளர்கள் கலாதேவி, கீதா உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.