ஈரோடு

நீட் தேர்வு: ஆசிரியர்களுக்கு  திறன் மேம்பாட்டுப் பயிற்சி

DIN

நீட் போட்டித் தேர்வுக்கு மாணவர்களை எவ்வாறு தயார் செய்வது என்பது குறித்த ஆசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 ஈரோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, செங்குந்தர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி ஆகிய 2 இடங்களில் தொடங்கிய இப்பயிற்சி முகாமை, ஈரோடு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் ரெ.பாலமுரளி, ஈரோடு மாவட்ட கல்வி அலுவலர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் மேற்பார்வையிட்டனர்.
 இதில், கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடப் பிரிவுகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. சென்னையில் ஏற்கெனவே பயிற்சி பெற்ற பயிற்றுநர்கள் இம்முகாமில் ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளித்தனர். மேலும், போட்டித் தேர்வுகளை மாணவர்கள் எப்படி எதிர்கொள்வது, குறைந்த நேரத்தில் விரைவாக தேர்வை எழுதும் வழிமுறைகள் குறித்து பயிற்சி அளிக்கப்படுகிறது. இதில் பயிற்சிபெறும் ஆசிரியர்கள் அந்தந்த மையங்களில் மாணவ, மாணவிகளுக்குப் பயிற்சி அளிக்கவுள்ளனர். புதன், வெள்ளி ஆகிய நாள்களில்  இப்பயிற்சி நடைபெறுகிறது.
 முன்னதாக, விடுமுறை நாள்களில் நீட் தேர்வு பயிற்சி மையத்தை நடத்த எதிர்ப்புத் தெரிவித்து முதுகலை ஆசிரியர்கள் ஒரு மணி நேரம் பயிற்சி முகாமை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 
இதுகுறித்து, ஆசிரியர்கள் கூறியதாவது:  ஏற்கெனவே கூடுதல் பணிச் சுமையுடன் பணிபுரிந்து வரும் எங்களுக்கு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் நீட் தேர்வு பயிற்சி எடுக்க வேண்டும் என்று கூறுவது மன அழுத்தத்தைத் தரும்.  இதனால் வாரத்தின் 7 நாள்களிலும் பள்ளிகளுக்கு வரவேண்டிய சூழ்நிலை உருவாகி உள்ளது. பள்ளி வேலை நாள்களில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் வழங்கப்படும் பயிற்சிகளை மாணவர்களுக்கு வழங்குவதில் எந்த ஆட்சேபனையும் எங்களுக்குக் கிடையாது. அரசு விடுமுறை நாள்கள், சனி, ஞாயிற்றுக்கிழமையான விடுமுறை நாள்களில் போட்டித் தேர்வுக்கான பயிற்சியை அளிப்பது சிரமம். விடுமுறை நாள்களைத் தவிர்த்து வேலை நாள்களிலேயே கூடுதல் நேரம் நீட் தேர்வு பயிற்சி மையத்தை செயல்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நத்தத்தில் திடீர் தீ விபத்து: ரூ. 40 லட்சம் மதிப்புள்ள பொருள்கள் எரிந்து நாசம்!

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

SCROLL FOR NEXT