ஈரோடு

பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை: இறுதி முடிவு எடுக்க குழு'

DIN


அடுத்த ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுவதாகவும், இதற்கான இறுதி முடிவு எடுக்க குழு அமைக்கப்படும் என்றும் அமைச்சர் கே.சி.கருப்பணன் தெரிவித்தார்.
பவானிசாகர் தொகுதிக்கு உள்பட்ட அதிமுகவின் வாக்குச்சாவடி நிர்வாகிகள் கூட்டம் சத்தியமங்கலத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை நடைபெற்றது.
சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கருப்பணன் பேசியதாவது:
தமிழகத்தில் ஜனவரி, 2019 ஆம் ஆண்டு முதல் பிளாஸ்டிக் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படுகிறது. ஒருமுறை மட்டுமே பயன்படுத்தும் பை, தட்டு, டம்ளர் போன்ற பிளாஸ்டிக்குகளுக்கு மட்டுமே தடை விதிக்கப்படும். இருந்தாலும், ஐ.ஏ.எஸ். அதிகாரி தலைமையில் ஒரு குழு அமைத்து, ஆய்வு நடத்தி இன்னும் எந்தெந்தப் பொருள்களுக்குத் தடை விதிக்கப்படும் என்று இறுதி முடிவு எடுக்கப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருமருகலில் மே 5-இல் கடையடைப்பு

ராமநாதபுரம் அருகே வட மாநில கா்ப்பிணிப் பெண் கொலை

‘பொது வெளியில் கழிவு நீரை திறந்து விட்டால் கடும் நடவடிக்கை’

பரமக்குடி- மதுரை இடையே இடைநில்லா குளிா்சாதன பேருந்து இயக்கக் கோரிக்கை

ஓட்டப்பிடாரம் அருகே மாட்டுவண்டி போட்டி

SCROLL FOR NEXT