ஈரோடு

இலவச கால்பந்துப் பயிற்சி: ஆர்வமுள்ளவர்கள் பங்கேற்கலாம்

DIN

ஈரோடு, நாராயணவலசில் இயங்கி வரும் "யுனைடெட் ஸ்போர்ட்ஸ்' சார்பில், இலவச கால்பந்துப் பயிற்சி முகாம் செப்டம்பர் 24 முதல் அக்டோபர் 4 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் இதில் பங்கேற்கலாம்.
தேசிய அளவில் வளர்ந்து வரும் கால்பந்து விளையாட்டு வீரர்களை, மாவட்ட, மாநில, தேசிய அளவில் தயார் செய்யும் நோக்கில் இந்த கால்பந்து முகாம் நடத்தப்படுகிறது. மாணவர்களுக்கு கால்பந்தின் அடிப்படைப் பயிற்சி, விளையாட்டு நுணுக்கங்கள், உணவு முறை குறித்த பாடம், முதலுதவி, யோகா உள்பட  பல்வேறு பயிற்சிகள் அளிக்கப்படுகிறது. முகாமில் பயிற்சி பெறும் வீரர்களில்  சிறந்த வீரர்களாகத் தேர்வாகும் மாணவர்களுக்கு ஆண்டு முழுவதும் விளையாட்டுப் பயிற்சி, உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும்.
முகாமில், 5 முதல் 17 வயது வரையிலான ஆண், பெண் இருபாலரும் பங்கேற்கலாம். முகாமிற்கு வரும்போது விளையாடத் தேவையான உபகரணங்கள், தண்ணீர் பாட்டில், விரிப்பு, சிற்றுண்டியை மாணவர்களே எடுத்து வர வேண்டும். தினமும் காலை 6 முதல் 8 மணி வரையும், மாலை 4 முதல் 6.30 மணி வரையிலும் பயிற்சி அளிக்கப்படும். விருப்பம் உள்ள  மாணவர்கள் தங்களது பெயரை 99940-46055 என்ற எண்ணில் முன்பதிவு செய்து கொள்ளலாம் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராயன் வெளியீட்டுத் தேதி!

மீண்டும் வங்கதேச அணியில் ஷகிப் அல் ஹசன்!

கோட் படத்தில் சிவகார்த்திகேயன்?

நீட் தேர்வில் மோசடி: குஜராத்தில் ஆசிரியர் உள்பட மூவர் கைது

லக்னௌ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுகிறாரா கே.எல்.ராகுல்?

SCROLL FOR NEXT