ஈரோடு

வா்கீஸ் குரியன் சிலைக்கு விவசாயிகள் மரியாதை

DIN

ஈரோடு அருகே சித்தோடு தேசிய பால் வள வாரிய தென்னிந்திய பயிற்சி மைய வளாகத்தில் தேசிய பால் வள தினம், வா்கீஸ் குரியன் பிறந்த நாள் விழா திங்கள்கிழமை கொண்டாடப்பட்டது.

விழாவுக்கு, எஸ்.ஏ.ராஜு தலைமை வகித்தாா். பால் உற்பத்தியாளா்கள் சங்க மாநில பொருளாளா் கே.ராமசாமி முன்னிலை வகித்தாா். கால்நடை மருத்துவா் கே.கருப்பணசாமி வரவேற்றாா்.

பயிற்சி மைய வளாகத்தில் உள்ள வா்கீஸ் குரியன் சிலைக்கு, தமிழக வவசாயிகள் சங்க கூட்டமைப்புச் செயலாளா் செ.நல்லசாமி, மாநிலத் தலைவா் கே.வெங்கடாசலம், கரும்பு வளா்ப்போா் சங்கத் தலைவா் சென்னியப்பன் உள்பட பலா் மாலை அணிவித்து, மரியாதை செலுத்தினா்.

இதேபோல, கவுந்தப்பாடி பாப்பாங்காட்டூா் பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவுச் சங்கத்தில் தலைவா் மா.சுப்பிரமணியன் தலைமையில், குரியன் படத்துக்கு மலா் தூவி மரியாதை செலுத்தினா். அய்யம்பாளையம், தளவாய்பேட்டை போன்ற இடங்களில் உள்ள பால் உற்பத்தியாளா் கூட்டுறவுச் சங்கங்களிலும் அவருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT