ஈரோடு

மயிலம்பாடியில் ரூ.71 லட்சத்தில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம்

DIN

பவானி அருகே உள்ள மயிலம்பாடி சிற்றூராட்சியில் ரூ.71 லட்சம் மதிப்பில் மகளிர் சுய உதவிக் குழு கட்டடம் கட்டும் பணி செவ்வாய்க்கிழமை தொடக்கிவைக்கப்பட்டது. 
தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கே.சி.கருப்பணன் தலைமை வகித்து கட்டுமானப் பணிகளைத் தொடக்கிவைத்தார். தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியக் குழு உறுப்பினர்  கே.தட்சிணாமூர்த்தி, கூட்டுறவு சங்கத் தலைவர்கள் என்.கிருஷ்ணராஜ், பி.குப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 
மயிலம்பாடி வாரச் சந்தை வளாகத்தில், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.71 லட்சம் நிதியில்  3,790 சதுர அடி பரப்பளவில் இக்கட்டடம் கட்டப்படுகிறது. 
பவானி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் எம்.சிவசண்முகம், எஸ்.செல்வி, அதிமுக ஒன்றியச் செயலர் எஸ்.எம்.தங்கவேலு, ஊராட்சி எழுத்தர் மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT