ஈரோடு

பொதுத்தேர்வு: மாணவர்களுக்கான சிறப்பு வழிபாடு

DIN

ஈரோடு காரைவாய்க்கால் அருகே ராத்திரி சத்திரம் கல்யாண ஆஞ்சநேயர் கோயிலில் ஸ்ரீலட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அரசு பொதுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவ, மாணவியர் சிறந்த மதிப்பெண் பெற வேண்டும் என்பதற்காக, இந்தக் கோயிலில்  ஆண்டுதோறும் லட்சுமி ஹயக்ரீவர் ஹோமம் நடத்தப்படுகிறது.
அதன்படி, ஞாயிற்றுக்கிழமை காலை முதலில் கோ பூஜையும், அதையடுத்து  சிறப்பு ஹோம பூஜையும், லட்சுமி, சரஸ்வதி வழிபாடும் நடந்தது.இதில் ஏராளமான மாணவ, மாணவிகள் பங்கேற்று பூஜையில் வைத்து எடுக்கப்பட்ட பேனா, பென்சில், நோட்டுகளை வாங்கிச் சென்றனர். 
இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஸ்ரீஆனந்த தீர்த்த டிரஸ்ட் அமைப்பினர் செய்திருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பெருங்களூரில் பிடாரியம்மன் கோயில் தோ்த் திருவிழா

அரசுப் பள்ளிகளுக்கு சீருடைகள் தைக்கும் பணி வழங்கக் கோரி மனு

பாரதியாா் பல்கலை.யில் எம்.எஸ்சி. செயற்கை நுண்ணறிவு படிப்புக்கு மாணவா் சோ்க்கை

அரவக்குறிச்சி பகுதிகளில் குழாய்கள் உடைந்து குடிநீா் வீணாவதாகப் புகாா்

மத்தியப் பல்கலைக்கழகத்தில் நுழைவுத் தோ்வு இல்லா படிப்புகள்

SCROLL FOR NEXT