ஈரோடு

குடிநீரில் கழிவுநீர் கலப்பு: பொதுமக்கள் புகார்

DIN

குடிநீரில் கழிவுநீர் கலப்பதாக  மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
மொடக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட அட்டவணை அனுமன்பள்ளி ஊராட்சி, கரும்புளியாம்பாளையம் பகுதி மக்கள் பயன்படுத்தி வரும் குடிநீர் கிணறு அருகில் சுகாதார வளாகம் அமைந்துள்ளது. தற்போது சுகாதார வளாகத்தின் கழிவுநீர்த் தொட்டி நிரம்பியதால், 
வாய்க்கால் வழியாகச் செல்லும் கழிவுநீர் குடிநீர் கிணற்றில் இறங்குகிறது. இதனால், 
அப்பகுதி மக்கள் குடிநீரைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்திடமும், ஒன்றிய  நிர்வாகத்திடமும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், மாநில உரிமை இழப்போர் பாதுகாப்பு அமைப்பின் கூட்டமைப்புத் தலைவர் விஜயானந்த் தலைமையில், பொதுமக்கள் மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலர் சசிகலாவை சந்தித்து மனு அளித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT