ஈரோடு

பயிர் காப்பீட்டுத் தொகையை உடனடியாக வழங்க வேண்டும்: விவசாயிகள் கோரிக்கை

DIN

பயிர்க் காப்பீட்டு திட்டத்தின்கீழ்,  2017 ஆம் ஆண்டுக்கான மஞ்சள், நிலக்கடலை, மக்காளச்சோளம், எள் உள்ளிட்ட பயிர்களுக்கு இழப்பீட்டு தொகையை உடனடியாக வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். பயிர் காப்பீட்டு திட்டத்தின் கீழ் 2017 ஆம் ஆண்டு நெல், எள், நிலக்கடலை, மக்காச்சோளம், மஞ்சள் உள்ளிட்ட பயிர்கள் இழப்பீட்டுத் தொகைக்கு அரசு ஆய்வு செய்தது. இதனையடுத்து நெல்லுக்கு மட்டும் விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகையை வழங்கி உள்ளது. 
இதுகுறித்து தமிழ்நாடு சிறு குறு விவசாயிகள் சங்கத்தின் மாநிலத் தலைவர் சுதந்திரராசு கூறியதாவது: 
பயிர்க் காப்பீட்டு திட்டத்தின் கீழ் அரசு 2017 ஆம் ஆண்டு புஞ்சை பயிர்களுக்கு வழங்க வேண்டிய இழப்பீட்டுத் தொகையில் நெல்லுக்கு மட்டுமே வழங்கி உள்ளது. ஆனால் எள், மக்காச்சோளம், நிலக்கடலை, மஞ்சள் உள்ளிட்ட பயிர்களுக்கு இதுவரை இழப்பீட்டு தொகையை வழங்காமல் உள்ளனர். மாவட்டத்திலேயே மொடக்குறிச்சி பகுதியில் தான் அதிக அளவிலான விவசாயிகள் பயிர் காப்பீடு செய்துள்ளனர்.  மாவட்ட ஆட்சியரின் முயற்சியால் நெல்லுக்கு மட்டும் இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. 
அதேபோல் மற்ற பயிர்களுக்கும் காப்பீட்டு நிறுவனத்திடம் இருந்து மாவட்ட ஆட்சியர்  மற்றும் அதிகாரிகள் முயற்சி செய்து விவசாயிகளுக்கு வழங்க வேண்டிய நிவாரணத்தை உடனடியாக பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காலமானார் எஸ். வீரபத்திரன்

நீட் தேர்வு நாளை தொடக்கம்

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

SCROLL FOR NEXT