ஈரோடு

பவானிசாகர் அணைப் பூங்காவில் பொங்கல் கொண்டாட்டம்

DIN

பவானிசாகர் அணைப் பூங்காவில் பொங்கல் விழா  கொண்டாடப்பட்டது. கடந்த 3 நாள்களில் ரூ. ஒரு லட்சத்து 93 ஆயிரத்து 403 வசூலாகி உள்ளது. 
ஈரோடு மாவட்டத்தின் முக்கிய பொழுதுபோக்கு தலமாக பவானிசாகர் அணைப் பூங்கா உள்ளது. காணும் பொங்கலையொட்டி,  ஈரோடு, கோவை, நீலகிரி மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்து சுற்றுலாப் பயணிகள் மற்றும் கிராம மக்கள் பூங்காவுக்கு வந்தனர். அணைப் பூங்காவில் குழந்தைகள் சிறுவர் ரயில், படகுசவாரி உள்ளிட்ட பொழுது போக்கு அம்சத்தில் சென்று மகிழ்ந்தனர்.  பொங்கலையொட்டி, கடந்த 3 நாள்களில் அணைப் பூங்கா நுழைவுக் கட்டணம் மற்றும் பார்க்கிங் கட்டணமாக மொத்தம் ரூ.1 லட்சத்து 93 ஆயிரத்து 403 வசூலானதாக அணை செயற்பொறியாளர் சுப்பையா தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5ஆம் கட்டத் தேர்தல்: 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடக்கம்

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு?

இன்று எப்படி இருக்கும்?

பீன்ஸ் கிலோ ரூ.200

உத்திரகாவிரி ஆற்றில் வெள்ளம்: ஒரே இரவில் நிரம்பிய தடுப்பணை

SCROLL FOR NEXT