ஈரோடு

நடமாடும் ஏடிஎம் மையத்தில் ரூ.9.55 லட்சம் மாயமான வழக்கு: வங்கி ஊழியர் கைது

DIN


ஈரோட்டில் நடமாடும் ஏடிஎம் மையத்தில் ரூ.9.55 லட்சம் மாயமான வழக்கில் வங்கி ஊழியரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.           
ஈரோடு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் நடமாடும் ஏடிஎம் வாகனம், ஈரோடு பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை நிறுத்தப்பட்டிருந்தது. இந்நிலையில் மதியம் 1.30 மணியளவில் திடீரென அந்த வாகனத்திலிருந்து புகை வந்தது. மேலும் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த ரூ.9.55 லட்சம் பணம் மாயமானது. இதுகுறித்து வங்கியின் பொதுமேலாளர் சந்திர பிரபா அளித்த புகாரின் பேரில் ஈரோடு டவுன் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இதையடுத்து நடமாடும் ஏடிஎம் வாகனத்தில் பணியாற்றும் வங்கி ஊழியரான அந்தியூர், பிரம்மதேசம் கிராமத்தைச் சேர்ந்த சரவணனிடம் (30) போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். இதில், வாகன ஓட்டுநர் மற்றும் வாகனத்தில் உள்ள மற்றொரு ஊழியர் இருவரும் சாப்பிடச்சென்ற நேரத்தில் ஏடிஎம் இயந்திரத்தில் இருந்த பணம் ரூ.9.55 லட்சத்தை எடுத்து, தனது இருசக்கர வாகனத்தில் மறைத்து வைத்த சரவணன், இச்சம்பவத்தை திசை திருப்பும் நோக்கில் இயந்திரத்துக்கு தீ வைத்தது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீஸார் சரவணனை கைது செய்து, அவரிடமிருந்து ரூ.9.55 லட்சம் ரொக்கத்தை பறிமுதல் செய்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிறுமிக்கு பாலியல் தொல்லை: காா் ஓட்டுநா் கைது

ஆம்புலன்ஸ் மோதி பெண் உயிரிழப்பு

கா்ப்பிணிபோல நடித்து பணம் கேட்கும் பெண்கள் -நடவடிக்கை எடுக்க மக்கள் கோரிக்கை

அரசு கல்லூரியில் நோ்முகத் தோ்வு:22 பேருக்கு நியமன ஆணை

ஆபாச காணொலிகளை வெளியிடுவதாக அறிவித்தவரை ஏன் கைது செய்யவில்லை?: எச்.டி.குமாரசாமி

SCROLL FOR NEXT