ஈரோடு

மீன் வளர்ப்போர் பிஐஎஸ் தரமுள்ள தீவனங்களைப் பயன்படுத்த வேண்டுகோள்

DIN


மீன் வளத்தை மேம்படுத்த, மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள், கட்டாயமாக பிஐஎஸ் (இந்திய தர நிர்ணய நிறுவனம்) தரத்தில் உள்ள மீன் தீவனங்களை உபயோகிக்க வேண்டும் என ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு:
மீனவர்கள், மீன் வளர்க்கும் விவசாயிகள், பிஐஎஸ் தரம் கொண்ட கெண்டை மீன் தீவனம், கெளுத்தி மீன் தீவனம், கடல் இறால் தீவனம் மற்றும் நன்னீர் இறால் தீவனங்களை மட்டும் பயன்படுத்த வேண்டும்.
 தரமுள்ள மீன் தீவனங்களை பயன்படுத்துவதன் மூலம்,  நல்ல மீன்களை உற்பத்தி செய்து, ஏற்றுமதிக்கான வாய்ப்புகளையும், அதிக லாபமும் பெறலாம்.
கூடுதல் விவரம் பெற மீன் வளத்துறை உதவி இயக்குநர் அலுவலகம், 4 எஸ்வி காம்ப்ளக்ஸ், 2ஆம் தளம், வீரப்பம்பாளையம் பிரிவு, பெருந்துறை சாலை, திண்டல் அஞ்சல், ஈரோடு- 638012, என்ற முகவரியில் நேரிலோ அல்லது 0424 2271912 என்ற தொலைபேசி எண்ணிலோ தொடர்பு கொள்ளலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மீண்டும் இணைந்த ‘ஜோ’ பட கூட்டணி!

கொல்கத்தா அருகே ஆடை உற்பத்தி நிறுவனத்தில் தீ

சவுக்கு சங்கர் கைது! அழைத்துச் சென்ற வாகனம் விபத்து

கிரிக்கெட்டில் எனது தந்தை தோனி: பதிரானா நெகிழ்ச்சி!

தங்கம் விலை: இன்று எவ்வளவு குறைந்தது தெரியுமா?

SCROLL FOR NEXT