ஈரோடு

பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்வு: ஈரோடு அரசு மருத்துவமனைக்கு ரூ.67.46 கோடி மதிப்பில் கட்டமைப்பு வசதி

DIN

ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் ரூ.67.46 கோடி மதிப்பில் மருத்துவமனையில் பல்வேறு கட்டமைப்பு வசதிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.
 ஈரோடு அரசு தலைமை மருத்துவமனை 608 படுக்கை வசதி கொண்டது. இங்கு அறுவை சிகிச்சை, குழந்தைகள் நலம், மகப்பேறு, கண் சிகிச்சை, மன நோயாளிகள் பிரிவு, காசநோய் பிரிவு, எம்ஆர்ஐ., ஸ்கேன் வசதி, டயாலிசஸ் மற்றும் ஹெச்.ஐ.வி., தொற்று நோய் சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு சிகிச்சை பிரிவுகள் உள்ளன. மேலும், 50க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் பணியாற்றி வருகின்றனர்.
 இந்நிலையில், ஈரோடு அரசு மருத்துவமனை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதனால், நோயாளிகள் வெளி மாவட்டங்களுக்கு சிகிச்சைக்கு செல்வது தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 இது குறித்து மாவட்ட மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குநர் டாக்டர் ரமாமணி கூறியதாவது: அரசு மருத்துவமனையில் தற்போது பல்வேறு வகையான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளதால் இருதயம், சிறுநீரகம், பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க பரிந்துரை செய்துள்ளோம் என்றார்.
 இதுகுறித்து ஈரோடு மேற்கு தொகுதி எம்எல்ஏ கே.வி.ராமலிங்கம் கூறியதாவது: ஈரோடு அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என ஈரோடு மாவட்ட மக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்நிலையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி 110 விதியின் கீழ் ஈரோடு அரசு மருத்துவமனையை பல்நோக்கு மருத்துவமனையாக தரம் உயர்த்தி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
 மருத்துமனையை மேம்படுத்த ரூ.67.46 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டவுள்ளது. இப்போது, ஈரோடு அரசு மருத்துமனையின் பின் பகுதியில் 5 தளங்கள் கொண்ட கட்டடப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிந்த பிறகு முன் பகுதியில் உள்ள கட்டடம் புதுப்பிக்கப்படும்.
 பல்நோக்கு மருத்துவமனையாக உயர்த்தப்பட்டுள்ளதால் கோவை, சேலம் ஆகிய இடங்களில் உள்ள பல்நோக்கு மருத்துவமனைகள்போல் ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்படும். மேலும், இங்கு அனைத்து வகையான நோய்களுக்கும் சிகிச்சை அளிக்கும் வசதிகள் வர வாய்ப்புள்ளதால், சிகிச்சைக்காக மக்கள் வேறு மாவட்டங்களுக்குச் செல்வது தவிர்க்கப்படும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஸ்ஸாம் தடுப்பு முகாமில் இருந்து 17 வெளிநாட்டவரை நாடு கடத்த வேண்டும்: மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

பட்ஜெட்டில் முஸ்லிம்களுக்கு 15% நிதி: பிரதமரின் கருத்து ‘முட்டாள்தனம்’ - சரத் பவாா்

பள்ளி ஆசிரியையிடம் நகை பறிப்பு

ரத்த தான முகாம்

தங்கம் விலை மீண்டும் உயா்வு: பவுன் ரூ.54,360-க்கு விற்பனை

SCROLL FOR NEXT