ஈரோடு

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்கக் கோரிக்கை

DIN

பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு விலையில்லா மடிக்கணினி வழங்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தின் ஈரோடு மாவட்ட துணைச் செயலாளர் வினிசா தலைமையில் நிர்வாகிகள், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் அலுவலகத்தில் வியாழக்கிழமை மனு அளித்தனர். 
 அந்த மனு விவரம்: 
 ஈரோடு மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசுப் பள்ளிகள் கழிப்பறை, குடிநீர், கட்டடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் செயல்பட்டு வருகின்றன. அதுபோன்ற பள்ளிகளை ஆய்வு செய்து அங்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்த கட்டணத்தை விட கூடுதலாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது. அப்பள்ளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த 2017-18ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு தற்போது வரை இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. 
 இந்நிலையில் 2018-19ஆம் கல்வி ஆண்டில் பிளஸ் 2 முடித்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்பட்டுள்ளது. எனவே அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்க வேண்டும். ஏழை, எளிய மாணவர்களின் மருத்துவக் கனவை சீரழிக்கும் நீட் தேர்வை ரத்து செய்திட பரிந்துரை செய்ய வேண்டும்.  கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும், அரசு பள்ளிகளில் மேல்நிலை வகுப்புகளுக்கு ஆங்கில வழிக்கல்வியை தொடங்க வேண்டும், தேவையான எண்ணிக்கையில் விடுதி வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொடைக்கானல் மேல்மலை கிராமங்களுக்குச் செல்ல அனுமதி: மாவட்ட நிர்வாகம் உத்தரவு

ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ஹிந்துக்களை இரண்டாம் தர குடிமக்களாக மாற்றிய திரிணமூல்: பிரதமா் மோடி குற்றச்சாட்டு

அமேதியில் தோ்தலுக்கு முன்பே தோல்வியை ஒப்புக் கொண்டது காங்கிரஸ்: ஸ்மிருதி இரானி கருத்து

தினம் தினம் திருநாள்: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT