ஈரோடு

பண்ணாரி அம்மன் கோயில் உண்டியல்  காணிக்கை ரூ. 84.32 லட்சம்

DIN

பண்ணாரி அம்மன் கோயிலில் உண்டியல் காணிக்கையாக ரூ. 84.32 லட்சம் வரப்பெற்றது.
ஈரோடு மாவட்டம்,  சத்தியமங்கலத்தை அடுத்துள்ளது பண்ணாரி அம்மன் மாரியம்மன் கோயில். 
இக்கோயிலில் பக்தர்கள் நேர்த்திக் கடனாக ரொக்கம்,  தங்கம் ஆகியவற்றை காணிக்கையாக செலுத்துவர். இதற்கென கோயில் வளாகத்தில் உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. 
குண்டம் விழாவையொட்டி வைக்கப்பட்ட உண்டியல்கள் கோயில் அதிகாரிகள், அறங்காவலர்கள் முன்னிலையில் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.  
இதில் 20 உண்டியல்களில் ரூ. 84 லட்சத்து 32 ஆயிரத்து 460 ரொக்கம்,  தங்கம் 416 கிராம், வெள்ளி 1,360 கிராம் ஆகியவற்றை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர். 
 குண்டம் விழாவையொட்டி கடந்த மார்ச் 4 ஆம் தேதி வைக்கப்பட்ட  பின்னர் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை இது என்பது குறிப்பிடத்தக்கது. உண்டியல் எண்ணும் பணியில் கல்லூரி மாணவிகள் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT