ஈரோடு

ரயில் பாதை பராமரிப்புப் பணி:  ஈரோடு - திருச்சி ரயில் சேவையில் மாற்றம்

DIN

ரயில் பாதை பராமரிப்புப் பணி காரணமாக ஈரோடு-கரூர்-திருச்சி ரயில் சேவையில் மே 3, 7 ஆம் தேதிகளில் சில மாற்றம் செய்யப்பட்டுள்ளது.  
இதுகுறித்து சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஈரோடு-கரூர்-திருச்சி கோட்டை ரயில் நிலையம் இடையே ரயில் பாதையில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன. இதனால் கரூர்-திருச்சி பயணிகள் ரயில், திருச்சி - கரூர் பயணிகள் ரயில் வரும் 7 ஆம் தேதி ரத்து செய்யப்படுகிறது.
மே 3, 7 ஆம் தேதிகளில் சில ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி கோவை -நாகர்கோவில் பயணிகள் விரைவு ரயில் ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் வழியாக திருப்பிவிடப்படும். பாலக்காடு டவுன் - திருச்சி பயணிகள் ரயில் ஈரோடு வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி பயணிகள் ரயில் கரூரில் இருந்து புறப்படும். திருச்சி - ஈரோடு பயணிகள் ரயில் ஈரோடு-கரூர் இடையே ரத்து செய்யப்பட்டு கரூரிலிருந்து புறப்படும். ஈரோடு-திருச்சி பயணிகள் ரயில் வரும் 7 ஆம் தேதி ஈரோட்டில் இருந்து கரூர் வரை மட்டுமே இயக்கப்படும்.
திருநெல்வேலி - ஈரோடு பயணிகள் ரயில் 3 ஆம் தேதி திண்டுக்கல் - கரூர் இடையே 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். ஈரோடு-ஜோலார்பேட்டை பயணிகள் ரயில் ஈரோடு ரயில் நிலையத்தில் இருந்து 30 நிமிடங்கள் தாமதமாகப் புறப்படும் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழகத்தில் மீண்டும் உச்சபட்ச மின் நுகா்வு

நீலகிரி மாவட்ட பதிவெண் கொண்ட வாகனங்களுக்கு இ-பாஸ் தேவையில்லை!

சிஎஸ்கே போட்டியில் பிரபலமான ரசிகரை கௌரவித்த லக்னௌ அணி!

கவனம் ஈர்க்கும் வசந்தபாலனின் 'தலைமைச் செயலகம்' டீசர்!

அதிக வெயில் ஏன்? வானிலை ஆய்வு மையம் விளக்கம்!

SCROLL FOR NEXT