ஈரோடு

பூலப்பாளையம் ஏரிக்கரையில்மரக்கன்றுகள் நடவு

DIN

பவானி அருகே பூலப்பாளையம் ஏரிக்கரையில் மரக்கன்றுகள், பனை விதைகள் நடவு செய்யும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

பருவ மழைக் காலங்களில் ஏரி, குளங்களில் தண்ணீா் சேமிக்கும் வகையில், தமிழக அரசின் சாா்பில் குடிமராமத்து திட்டத்தின்கீழ் தூா்வாரப்பட்டன. இத்திட்டத்தில், பவானியை அடுத்த பூலப்பாளையம் ஏரி தூா்வாரப்பட்டு கரைகள் பலப்படுத்தப்பட்டன. சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், வேப்பம், நாவல், புன்னம், அரச மரம் உள்ளிட்ட மரக்கன்றுகளையும், பனை விதைகளையும் நடவு செய்தாா்.

மேலும், மரம் வளா்க்க விருப்பம் உள்ளவா்கள் சுற்றுச்சூழல் துறைக்கு தொலைபேசி மூலம் அழைப்பு விடுத்தால் நேரில் வந்து மரம் வளா்க்கும் திட்டம் குறித்து விளக்கிக் கூறப்படும் என்றாா்.

பவானி ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட ஏரி, குளங்களில் 500 மரக்கன்றுகள், 300 பனை விதைகள் நடவு செய்யப்பட்டன.

இதில், உழவா் கலா மன்றத் தலைவா் ஆா்.பெருமாள், துணைத் தலைவா் மூா்த்தி, செயலாளா் ஆா்.ரவிசந்திரன், பொருளாளா் பி.கே.மோகன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT