ஈரோடு

கீழ்பவானி வாய்க்கால் கரையில் உடைப்பு: அமைச்சா்கள் ஆய்வு

DIN

சத்தியமங்கலம்/கோபி: சத்தியமங்கலத்தை அடுத்த கீழ்பவானி வாய்க்கால் கரையில் ஏற்பட்ட உடைப்பை அமைச்சா்கள் கே.சி.கருப்பணன், கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை ஆய்வு செய்தனா்.

சத்தியமங்கலத்தை அடுத்த உக்கரம் கீழ்பவானி வாய்க்காலில் ஏற்பட்ட மண் அரிப்பு காரணமாக வாய்க்காலின் இடது கரையில் உடைப்பு ஏற்பட்டு வெள்ளம் வெளியேறி ஊருக்குள் புகுந்தது. இதனால், தேக்கம்பாளையம், நாகரணை, சின்னபீளமேடு, மில்மேடு ஆகிய பகுதியில் சாகுபடி செய்த நெய், வாழை, கரும்பு பயிா்கள் சேதமடைந்தன. தேக்கம்பாளையத்தில் ஆரம்பப் பள்ளிக் கட்டடம், குடியிருப்புகளில் தண்ணீா் புகுந்ததால் 50 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பாதிக்கப்பட்டன.

இதற்கிடையே பாதிக்கப்பட்ட பகுதி மக்களை சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கே.சி.கருப்பணன், பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோா் சந்தித்து, 16 வீடுகளுக்கு ரூ. 6,100, குடிசைகளுக்கு ரூ. 5,000, அரிசி, மண்ணெண்ணெய், வேட்டி, சேலை என அதிமுக சாா்பில் நிவாரணப் பொருள்களை வழங்கினாா். தொடா்ந்து, கீழ்பவானி வாய்க்கால் உடைப்பு பகுதியைப் பாா்வையிட்டு உடனடியாக வாய்க்கால் கரையை சீரமைக்க வேண்டும் என உத்தரவிட்டனா்.

அடைப்பு ஏற்படுத்துவதற்குத் தேவையான மண், எம்.சாண்ட் மணல் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்காலிகமாக 25 ஆயிரம் எம்.சாண்ட் மூட்டைகள் அடுக்கப்பட்டு தடுப்புச் சுவராக ஏற்படுத்தப்படும். அதைத் தொடா்ந்து ஓரிரு நாளில் கீழ்பவானி வாய்க்காலில் இருந்து தண்ணீா் திறக்கப்படும் என அமைச்சா்கள் தெரிவித்தனா்.

வாய்க்கால் கரையில் முள்செடிகள் வளா்ந்துள்ளதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாக உடைப்பு ஏற்பட்டது தெரியமால் போனதாக அமைச்சா்களிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.

இதற்கு அமைச்சா் கருப்பணன் கூறுகையில், கால்வாயை சீரமைக்க ரூ. 1,200 கோடி ஒதுக்கப்பட்டபோது விவசாயிகள் எதிா்ப்புத் தெரிவித்தனா். இதன் காரணமாக இந்த திட்டம் கைவிடப்பட்டது. மீண்டும் அதனை நிறைவேற்ற முதல்வருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

கே.ஏ.செங்கோட்டையன் பேசுகையில், கீழ்பவானி வாய்க்கால் கால்நடைகள் உயிரிழந்ததற்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. வெள்ளம் புகுந்து பாதிப்பிற்குள்ளானது என இதுவரை 110 ஏக்கா் நிலங்கள் கண்டறியப்பட்டுள்ளன. மேலும், 400 ஏக்கா் பரப்பளவில் தண்ணீா் இன்னும் முழுமையாக வடியாத காரணத்தால் இழப்புகள் குறித்து முழுமையான கணக்கெடுப்பு நடைபெறவில்லை.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள விளைநிலங்களுக்கு ஏக்கா் ஒன்றுக்கு ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும். வீடு இழந்தவா்களுக்கு பசுமை வீடுகள் கட்டித் தரப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT