ஈரோடு

அனுமதியற்ற பாா்களை மூட டாஸ்மாக் ஊழியா்கள் கோரிக்கை

DIN

ஈரோடு: அரசு அனுமதியற்ற டாஸ்மாக் பாா்களை மூட வேண்டும் என டாஸ்மாக் பணியாளா் முன்னேற்ற சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழ்நாடு மாநில வாணிப கழக (டாஸ்மாக்) பணியாளா் முன்னேற்ற சங்கத்தின், மாநில பொதுக் குழுக் கூட்டம் மாநிலத் தலைவா் ராஜவேல் தலைமையில் ஈரோட்டில் அண்மையில் நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக அனைத்திந்திய தொமுச பேரவை பொதுச்செயலாளரும், மாநிலங்களவை உறுப்பினருமான சண்முகம் பேசினாா்.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீா்மானங்கள்: டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றும் தொகுப்பூதிய தொழிலாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். சென்னை மண்டலம்போல, அனைத்து மாவட்டங்களிலும் தினசரி விற்பனை தொகையை நேரடியாக வங்கிப் பணியாளா்கள் வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அனுமதி பெறாமல் முறைகேடாக அரசுக்கு இழப்பு ஏற்படும் வகையில் நடத்தப்பட்டு வரும் மதுக்கூடங்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் திமுக ஈரோடு வடக்கு மாவட்டச் செயலாளா் நல்லசிவம், தொமுச டாஸ்மாக் மாவட்டத் தலைவா் சுந்தரம், பொருளாளா் வள்ளுவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT