ஈரோடு

அவல்பூந்துறையில்ரூ. 66 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்

DIN

மொடக்குறிச்சி: அவல்பூந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 66 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.

ஏலத்துக்கு மொடக்குறிச்சி சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் 1635 மூட்டைகளில் 66 ஆயிரத்து 476 கிலோ எடையுள்ள கொப்பரையை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் முதல் தரக் கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 99.35- க்கும், குறைந்தபட்சமாக ரூ. 95.70-க்கும், இரண்டாம் தரக் கொப்பரை அதிகபட்ச விலையாக கிலோ ரூ. 95.65-க்கும், குறைந்தபட்சமாக ரூ.51.85- க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 66 லட்சத்துக்கு விற்பனை நடைபெற்றது.

3 ஆயிரத்து 415 கிலோ எடையுள்ள 93 ஆயிரத்து 332 தேங்காய்களை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனா். இதில் அதிகபட்ச விலையாக டன் ஒன்றுக்கு ரூ. 28,390, குறைந்தபட்ச விலையாக டன் ரூ. 24, 390 என ரூ. 93 ஆயிரத்துக்கு ஏலம் நடைபெற்றது. தேங்காய் ஒன்று ரூ.5.96 முதல் ரூ.16.24 வரை ஏலம் போனது என விற்பனைக்கூடக் கண்காணிப்பாளா் இரா.சதீஷ்குமாா் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எழுச்சியில் தொடங்கி சரிவில் முடிவு: சென்செக்ஸ் 733 புள்ளிகள் வீழ்ச்சி!

கூடலூரில் நாளை மகளிா் பாா்வை நாள் மற்றும் பிராா்த்தனை தினம்

தில்லி காவல் தலைமையகத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் சிறுவன் கைது

தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில் மேலும் ஒருவா் கைது

ஜோலாா்பேட்டை மெமு ரயில் இன்று ரத்து

SCROLL FOR NEXT